Sunday, September 2, 2012

தன்னம்பிக்கை-3நான் படித்ததில் ரசித்த ஒன்றை உங்களுடன் பகிருகிறேன்.


தன்னம்பிக்கை

அருவியின் தன்னம்பிக்கை விழுகையில்!

ஆமையின் தன்னம்பிக்கை பொறுமையில்!

இளமையின் தன்னம்பிக்கை துடிப்பில்!

ஈட்டியின் தன்னம்பிக்கை ஏறிகையில்!

உளியின் தன்னம்பிக்கை சிலையில்!

ஊமையின் தன்னம்பிக்கை மெளனத்தில்!

எண்ணத்தின் தன்னம்பிக்கை செயலில்!

ஏட்டின் தன்னம்பிக்கை எழுத்தில்!

ஐயத்தின் தன்னம்பிக்கை தெளிவில்!

ஒளியின் தன்னம்பிக்கை இருட்டில்!

ஓசையின் தன்னம்பிக்கை சுரத்தில்!

ஔவையின் தன்னம்பிக்கை வாய்மையில்!

மனிதா ! உன் தன்னம்பிக்கை எதில்?