Monday, August 20, 2012

ஏணிப்படி


இது நான் சமீபத்தில் படித்தது. இதை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.

  ஏணிப்படி


                                தொடும்
                                                                        தூரம் தொலைவில்லை !
                                                                        துவண்டு
                                                                        போனால் முடிவதிற்கில்லை !
                                                                    
                                                                        தோல்விகள் ஒன்றும்
                                                                        நிரந்தரம் அல்ல !
                                                                        வெற்றிகள் என்றும்
                                                                        நிலையானது அல்ல !   

                                                                       முயற்சிக்கு என்றும்
                                                                       தோல்வி இல்லை!
                                                                       வெற்றியே என்றும்
                                                                       முயற்சியின் எல்லை!

                                                                       முடியும் என்றால்
                                                                       தொடு  வானம்!
                                                                       முடியாது என்றால்
                                                                       அதுவே நெடு  வானம்!

                                                                       பறவை  கூட
                                                                       முயன்றால்  தான்
                                                                       சிறகை  விரிக்க  முடியும்!
                    
                                                                       மனிதர் கூட
                                                                       முயன்றால்  தான்
                                                                       வாழ்வில்  வெல்ல  முடியும்!

                                                                       வெற்றியே வானம்
                                                                       அதை அடைய
                                                   முயற்சியே ஏணிப்படி!





49 comments:

  1. அருமை நண்பரே!

    \\முயற்சிக்கு என்றும்
    தோல்வி இல்லை! \\

    மிகவும் உண்மை!!

    \\வெற்றியே என்றும்
    முயற்சியின் எல்லை!\\

    இதனுடன் வேறுபடுகிறேன்..
    முயற்சியின் எல்லை வெற்றியாக இருக்க வேண்டியதில்லை!
    நல்ல பாடமாகவோ, ஊக்கமாகவோ இருந்தால் போதும்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      முயற்சியின் நோக்கமே வெற்றி அடைதல்.
      ஏன் நண்பரே வெற்றி முயற்சியின் எல்லையாக இருக்ககூடாது?

      ஆம் நண்பரே ஒத்துக் கொள்கிறேன். நன்முயற்சி பாடத்தை கற்பிக்கிறது. ஊக்கமுட்டுகிறது. முயற்சியால் வெற்றி அடையும் போது மகிழ்ச்சியை அளிக்கிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

      மேலும் கருத்துக்கள் மாறுப்பட்டால் கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டுகிறேன். அது என்னை மேன்மேலும் வளர்த்திக் கொள்ள உதவும்.

      Delete
    2. வெற்றி கிடைத்தவுடன் நிறுத்தி விட்டால், அதன் பெயர் முயற்சி அல்ல!!

      Delete
  2. வணக்கம் நேசன்.தன்னம்பிக்கை தரும் கவிதை வரிகள்.முயற்சிக்கு என்றுமே வெற்றிதான்.தொடருங்கள்.வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.

      Delete
  3. நல்லதொரு தன்னம்பிக்கை வரிகள்... பாராட்டுக்கள்...

    தடைக் கற்கள் எல்லாம் படிக்கற்கள் தானே...

    எந்த ஒரு தன்னம்பிக்கையிலும், முயற்சியிலும் தோல்வி வரும். அவ்வாறு வந்தாலும் தன்னம்பிக்கையும், முயற்சியையும் கைவிடாதவாறு முதலில் மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
      // எந்த ஒரு தன்னம்பிக்கையிலும், முயற்சியிலும் தோல்வி வரும். அவ்வாறு வந்தாலும் தன்னம்பிக்கையும், முயற்சியையும் கைவிடாதவாறு முதலில் மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்..// நன்றி நண்பரே.

      Delete
  4. பகிர்வினுக்கு நன்றி.!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  5. தன்னம்பிக்கை கவிதை நன்று ராசன்!.தொடர்க! என் வலைப்பக்கத்திற்கு வந்ததற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  6. மிக அருமையான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  7. நல்ல கருத்துக்கள்...

    தன்னம்பிக்கையும் முயற்சியும் தோல்வி அடைந்தாலும், தளராத மன உறுதி முதலில் திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ள வேண்டும்...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    (ஏற்கனவே கருத்திட்டேன் நண்பரே...)

    ReplyDelete
  8. Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  9. ///முயற்சிக்கு என்றும்
    தோல்வி இல்லை!
    வெற்றியே என்றும்
    முயற்சியின் எல்லை!!///

    தன்னம்பிக்கை வரிகள் பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  10. இந்த பதிவை-
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

    வலைச்சரத்திற்கு -
    வருகை தாருங்கள்!
    தலைப்பு;
    கவிதை......

    http://blogintamil.blogspot.sg/

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை . எனக்கு கிடைத்த முதல் அறிமுகம். இறைவனுக்கு நன்றி. முதன் முதலாக கவிஞரின் மோதிர கையால் குத்து பெற்றுள்ளேன் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நன்றி நண்பரே.

      கவிஞரே, இதுவரை நான் படித்த மற்ற கவிஞர்களின் கவிதைகளை தான் பகிர்ந்துள்ளேன். நம்பிக்கை, தன்னம்பிக்கை, ஏணிப்படி மூன்றும் நான் படித்ததில் ரசித்த கவிதைகள். இதை நல்ல உள்ளம் கொண்ட தமிழ்வலைப் பதிவர்களுடன் பகிரவே ஆசைப்பட்டேன். ஆனால் இன்று கிடைத்த அறிமுகத்தால் மெய்சிலிர்த்துள்ளேன். நண்பரே. மன்னிக்கவும் நண்பரே. உணர்ச்சி வசப்பட்டு நான் நினைத்தை எழுதிவிட்டேன்.

      கண்டிப்பாக வருங்காலத்தில் தங்களின் பல கருத்துக்களை பெற என்னுள்ளே உள்ள கவிஞை உயிர் பெற்று வருவாள் என்பதை முழுமையாக நம்புகிறேன். மிக்க நன்றி நண்பரே.

      இன்று வலைச்சரத்தில் என்னுடன் அறிமுகமான அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே.

      Delete
  11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே. தங்களின் தொடர் வருகைகளும் மற்றும் வாழ்த்துக்களும் என்னை மென்மேலும் ஊக்கப்படுத்துகிறது. மிக்க நன்றி நண்பரே.

      Delete
  12. வாழ்த்துக்கள் நண்பா நீங்களும் ட்ரை பண்ணுங்க

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே. கண்டிப்பாக ட்ரை பண்ணுவேன்.

      Delete
  13. மிகவும் அருமையாகச் சொன்னீர்கள் முயற்சிதான்
    வெற்றிக்கு ஏணிப்படி.வாழ்த்துக்கள் தங்கள் முயற்சி
    வெற்றி பெற.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  14. ஏனிப்படி
    என்றில்லாமல்
    ஏணிப்படி
    ஏறி வர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  15. என் வலைபதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி.
    in. லிருந்து .com க்கு மாறும் வழிமுறையை இப்போது அதே பதிவில் சேர்த்துள்ளேன்.நேரம் இருப்பின் பார்க்கவும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி. தகவல் தந்தமைக்கு நன்றி. இதோ இப்பொழுதே செல்கிறேன் நன்றி.

      Delete
  16. ஏணிப்படி நல்லதொரு தன்னம்பிக்கை கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  17. // தோல்விகள் ஒன்றும் நிரந்தரம் அல்ல !வெற்றிகள் என்றும் நிலையானது அல்ல ! //

    தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்.

    நல்ல பகிர்வுக்கு நன்றி ராசன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  18. உங்கள் பக்கத்தில் நல்ல கவிதைகளாகக் பகிர்ந்து கொள்கிறீர்கள். கவிதை எழுதியவர் பெயரையும் குறிப்பிட்டால் அவர்களைப் பெருமைப்படுத்தியது போலவும் இருக்கும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே. கண்டிப்பாக ட்ரை பண்ணுவேன்.

      Delete
  19. அருமையான பகிர்வு தோழி.
    நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.

      Delete
  20. ungalukku viruthinai-
    pakirnthullen!

    etrukollavum!

    en thalathirkku varukai-
    tharavum

    ReplyDelete
    Replies
    1. வாவ்... நன்றி நண்பரே. என்னுடைய முதல் விருது. வார்த்தைகள் வரவில்லை. இதோ உங்கள் தளத்திற்கு செல்கிறேன். பகிரந்தமைக்கு நன்றி நண்பரே.

      Delete
  21. நல்ல கவிதை நண்பரே..இன்னும் கொஞ்சம் செதுக்குங்கள்....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  22. படித்ததைப் பகிர்ந்துள்ளது அழகு. பாராட்டுக்கள்.

    /வெற்றியே வானம்
    அதை அடைய
    முயற்சியே ஏணிப்படி// ;)))))

    பகிர்வுக்கு நன்றிகள்.



    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும்,பாராட்டுக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜயா.

      Delete

  23. தன்னம்பிக்கையை ஊட்டுகின்றன அனைத்துப் பதிவுகளும். மனம் சோர்வுறும் போதெல்லாம் இங்கு வரலாம் . நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
      கண்டிப்பாக வர வேண்டும் நண்பரே.

      Delete
  24. தன்னம்பிக்கை வைத்து வார்த்தைகளில் ஜாலம் காட்டுகிறீர்கள், பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete