Friday, August 31, 2012
Monday, August 20, 2012
ஏணிப்படி
இது நான் சமீபத்தில்
படித்தது. இதை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.
ஏணிப்படி
தொடும்
தூரம் தொலைவில்லை !
துவண்டு
போனால் முடிவதிற்கில்லை !
தோல்விகள் ஒன்றும்
நிரந்தரம் அல்ல !
வெற்றிகள் என்றும்
நிலையானது அல்ல !
முயற்சிக்கு என்றும்
தோல்வி இல்லை!வெற்றியே என்றும்
முயற்சியின் எல்லை!
முடியும் என்றால்
தொடு வானம்!முடியாது என்றால்
அதுவே நெடு வானம்!
பறவை கூட
முயன்றால் தான்சிறகை விரிக்க முடியும்!
மனிதர் கூட
முயன்றால் தான்
வாழ்வில் வெல்ல முடியும்!
வெற்றியே வானம்
அதை அடைய
முயற்சியே ஏணிப்படி!
Tuesday, August 14, 2012
தன்னம்பிக்கை
66வது சுதந்திர தின வாழ்த்துக்கள். நண்பர்களே.
இது நான் சமீபத்தில்
படித்தது. இதை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.
தன்னம்பிக்கை
சோதனை முறையில்
சாதனை படைப்போம்
இளைஞனே
தன்னம்பிக்கை என்ற
ஒன்றை மூலதனமாக்கினால்
இந்த தரணி எல்லாம்
கழனிகள் ஆகிவிடும்
காலம் கடந்தாலும்
நம் கடமை தவறாமல்
மண்ணின் மகத்துவம்
காப்போம்
உன் தோள்கள்
வலிமையானது – நீ
ஜெயிப்பவர்களின் மத்தியில்
ஜெயித்தவன் – நீ
பொங்கி எழும் அனல்
சுனாமி - உன்
கோபத்திற்கு அது பினாமி
சூறாவளியும்
உன் பார்வையால்
சுருண்டு விடும்
இளைஞனே
இன்றே புறப்படு
இமயத்தையும் குமரியையும்
ஒன்றாய் இணைத்திடு!
Subscribe to:
Posts (Atom)